இதைத்தான் வாங்குறாங்க இ-காமர்ஸ் வெப்சைட்டில..
ஒரு காலத்தில் ஸ்மார்ட்ஃபோன்களை அதிகம் பேர் போட்டி போட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்த காலம் மலையேறிவருகிறது. ஆமாம் நீங்கள் படித்தது உண்மைதான், வெறும் விலையை ஒப்பிட்டு பார்க்க மட்டுமே ஆன்லைனில் மக்கள் வருகின்றனர். இது தான் கள நிலவரமாக இருக்கிறது. ஒரு காலத்தில் தினசரி மளிகை உள்ளிட்ட பொருட்களை மக்கள் கடைகளிலும், ஸ்மார்ட் போன், டிவி உள்ளிட்டவற்றை ஆன்லைனில் வாங்கி வந்தனர். ஆனால்தற்போது நிலைமை தற்போது தலைகீழாக மாறியுள்ளது.
2021-22 காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் விற்பனை, இ-காமர்ஸ் நிறுவனங்களில் 48-49 விழுக்காடாக இருந்தது. ஆனால் இது கடந்தாண்டு 45 %ஆக குறைந்துள்ளது என்கிறது கவுன்ட்டர் பாயின்ட் நிறுவனம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டுகளில் டிவிகளை 34%வரை ஆன்லைனில் மக்கள் வாங்கி வந்த நிலையில் இது தற்போது 29-30%ஆக குறைந்திருக்கிறது.
இதேபோல் 21%விற்று வந்த வாஷிங் மிஷின் தற்போது 18-19%ஆக குறைந்திருக்கிறது என்கிறது சந்தை புள்ளி விவரம். மின்வணிக நிறுவனங்களில் தற்போது தினசரி உபயோகிக்கும் பொருட்கள்தான் அதிகம் விற்னையாகிறதாம். ஐடிசி, இமாமி, மேரிகோ நிறுவன பொருட்கள்தான் இ-காமர்ஸ் தளங்களில் அதிகம் விற்பனையாகின்றன. கொரோனா காலகட்டத்தில் மட்டுமே ஆன்லைனில் போன்களை பலரும் ஆர்டர்கள் அதிகளவில் செய்ததாகவும், தற்போது அந்த சூழல் மாறி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிறு சிறு நகரங்களில் இருந்துதான் அதிகம் பேர் இ-காமர்ஸ் இணையதளங்களுக்கு வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.