ஊழியர்களுக்கு இலவச டி,காபி அளிக்கும் பிரபல நிறுவனம்
சிக்கன நடவடிக்கையாக கடந்த கோடை காலத்தில் ஊழியர்களுக்கு டீ, காபி அளிப்பதை நிறுத்தியது இன்டெல் நிறுவனம். 10 பில்லியன் அமெரிக்க டாலரை மிச்சப்படுத்த இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் எடுத்திருந்தது. இந்த நிலையில் தற்போது இலவச, டி, காபி அளிக்கும் திட்டத்தை அந்நிறுவனம் மீண்டும் கொண்டுவந்துள்ளது. நிதி சவால்கள் இருந்த போதிலும் ஊழியர்கள் நலன் கருதி, சிறிய அளவிலான அன்பளிப்புகளாக டி, காபி அளிப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. கடந்த அக்டோபரில் இண்டெல் நிறுவனம் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனது பணியாளர்களை அமெரிக்காவில் இருந்து நீக்கியது. 15 ஆயிரம் பேரை ஆகஸ்ட்டில் நீக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. பணத்தை மிச்சப்படுத்தும் முயற்சியாக பணியாளர்களே வேலையை விட்டு செல்லும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஊழியர்களுக்கு தேவையான இணைய வசதி, போன் பில் மற்றும் போக்கு வரத்து செலவுகளை அந்நிறுவனம் குறைத்தது. சிப் தயாரிப்பு மற்றும் உற்பத்தி குறித்த தகவல்களை தனித்தனியாக நிர்வகிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு பிரிப்பதன் மூலம் உற்பத்தி துறை சிறப்பாக இருக்கும் என்றும் சிஇஓ ஜெல்சிங்கர் தெரிவித்துள்ளார்.