பிரஷர் குக்கருடன் ஒப்பிட்ட ஸ்ரீதர் வேம்பு..
இந்தியாவில் பணி கலாசாரம் மாற வேண்டும் என்று பிரபல தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். அதிகரிக்கும் பணி சூழல் சார்ந்த மரணங்கள் பற்றி தனியார் செய்தி முகமைக்கு பேட்டியளித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, மனித மதிப்பை மையப்படுத்தி பெரிய நிறுவனங்கள் பணி சூழலை மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பிரஷர் குக்கர் போன்ற பணி சூழல் கண்டிப்பாக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ள அவர், ஏற்கனவே பணியாளர்கள் தனிமை, அதிக தூர பயணம், அழுத்தமான பணி சூழல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மேலும் அழுத்தம் தரக்கூடாது என்றும் சிறு சிறு ஓய்வு பணியாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. பணியாளர் நலன்தான் நீண்டகால வெற்றிக்கு முக்கிய காரணியாக அமையும் என்றும் வேம்பு கூறியுள்ளார். சிறு நகரங்களில் இருந்து பணியாளர்களை பெரிய நகரங்களை நோக்கி அழைத்துச்செல்வதே முதலில் தனிமையை உருவாக்கும் என்று கூறியுள்ள வேம்பு, இளைஞர்கள் இருக்கும் இடத்துக்கு அருகிலேயே பணிகள் கிடைத்தால் அது இன்னும் சிறப்பு என்றார். தற்சார்பு கொண்ட வளர்ச்சியில் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் வணிகத்தின் எதிர்காலத்தை கணக்கிட வேண்டும் என்றும்,
இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு முன்னெடுப்புகளை பாராட்டியுள்ள வேம்பு, இந்தியர்களின் வளர்ச்சி குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த பரவலான வளர்ச்சி பிற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக மாறுவதாகவும் கூறியுள்ளார். பணியாளர்களின் நலனை முன்னிருத்தி பணி சூழல் , கலாசாரம் மாறியே தீரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.