டைட்டன் நிறுவனத்துக்கு வந்த சோதனை..

டைட்டன் நிறுவனத்தின் வணிக வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 26 விழுக்காடு உயர்ந்து செப்டம்பர் காலகட்டத்தில் முடிந்தாலும் , லாபத்தில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக சுங்க வரி கூறப்படுகிறது. இரண்டாவது காலாண்டில் நகைப்பிரிவு விற்பனை கடுமையாக குறைந்தது. 540 அடிப்படை புள்ளிகள் குறைந்த அந்நிறுவனத்தின் மார்ஜின் 8.7விழுக்காடாக குறைந்துள்ளது. இதில் ஏற்பட்ட சரிவு இரண்டாவது பாதி ஆண்டில் சீரடையும் என்று டைட்டன் நிறுவனம் நம்பிக்கையுடன் உள்ளது. இரண்டாவது காலாண்டில் தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. காத்திருந்து வாங்கலாம் என்று உத்தியை கையில் எடுத்ததால் டைட்டனில் நகை வணிகம் பாதிக்கப்பட்டது. 1முதல் 2லட்சம் ரூபாய் அளவுக்கு வாங்கும் பிரிவில் எந்த பாதிப்பும் இல்லை அதேநேரம், கற்கள் பதித்த சில நகைகளுக்கு 30 விழுக்காடு வரை சரிவு ஏற்பட்டது. ஆய்வங்களில் வளர்க்கப்படும் வைரத்தின் வருகையால் இயற்கையான வைரத்தின் விற்பனையும் மந்தமாகியுள்ளது. தங்கம் சார்ந்த ஆபரணங்கள் பெரியளவு பாதிக்கப்பட்டாலும், டைட்டனில் வாட்ச்கள் விற்பனை 14.9விழுக்காடு உயர்ந்துள்ளது. இது 26 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும். ஊரே டிஜிட்டல் வாட்ச் பக்கம் சென்றாலும், டைட்டனில் அனலாக் வாட்ச்கள்தான் அதிகம் விற்கப்படுகின்றன. இதன் வளர்ச்சி 26 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆதித்யா பிர்லா குழுமத்தினரும் நகை வணிகத்தில் புகுந்துள்ளதால் டைட்டன் நிறுவனத்துக்கு போட்டி அதிகரித்துள்ளது. நகை உற்பத்தி செலவு, கடைகள் விரிவாக்கம் உள்ளிட்டவை டைட்டனின் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தும் காரணிகளாக கூறப்படுகிறது. இந்த காரணிகளால் முதலீட்டாளர்கள் மனநிலையும் மாறும் என்று கூறப்படுகிறது.