டமாஸ் நகைக்கடையை வாங்குகிறது டைட்டன்..

டாடா குழுமத்தில் இயங்கி வரும் டைட்டன் நிறுவனம், நகை மற்றும் வாட்ச்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனம் கத்தாரை அடிப்படையாக கொண்டு இயங்கும் டமாஸ் நகைக்கடையை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4,500கோடி ரூபாய் என்ற விலை வந்ததும் வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இருதரப்புக்கும் இடையே இதுவரை அதிகாரபூர்வ ஒத்திசைவு ஏதும் அமையவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பே டமாஸ் நகைக்கடையை வாங்க டாடா நிறுவனம் முயற்சித்து தோல்வியடைந்தது. வளைகுடா நாடுகளில் டமாஸ் நகைக்கடைக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். 1907 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் டமாஸ் நகைக்கடை வளைகுடா நாடுகளில் 300க்கும் மேற்பட்ட கடைகளை வைத்துள்ளது. 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். தங்க நகைகள் , ராபர்ட்டோ காயின் மிகிமோட்டோ உள்ளிட்ட நகைகளை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.
24 நிதியாண்டின் கடைசி காலாண்டின் வருவாயாக 2,487 கோடியும், 7 கோடி ரூபாய் லாபமும் அந்நிறுவனம் ஈட்டியுள்ளது. டமாஸ் நிறுவனத்தை வாங்க டைட்டன் இரண்டாவது முறையாக முயற்சித்து வரும் நிலையில், அது தனிஷ்க் நிறுவனத்துக்கு பெரிய பலமாக அமையும், தங்க நகைகளுக்கான 5 ஆவது பெரிய சந்தையாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது.