உச்சம் தொட உள்ள வணிக பற்றாக்குறை
இந்தியாவின் வணிக பற்றாக்குறை ஆகஸ்ட் மாதத்தில் மிக அதிகளவாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் இறக்குமதி இதுவரை இல்லாத வகையில் 3.4%அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 64.4பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. அதே நேரம் ஏற்றுமதி விகிதம் 9.4%ஆக சரிந்து 34.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது. தங்கத்தின் இறக்குமதி இதுவரை இல்லாத வகையில் 10 பில்லியன் டாலர்களாக அதாவது இருமடங்காக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 64.36 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்த இறக்குமதி இது கடந்த 2022 ஜூன் மாதத்தை விட அதிகமாகும். சுங்க வரி குறைப்பு, விலைவாசி உயர்வு, இந்தியாவில் பண்டிகைகாலம் வர உள்ளதால் இந்தளவு தங்கம் இந்தியாவுக்கு வந்துள்ளதாக வணிக செயலாளர் சுனில் பார்த்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வணிக பற்றாக்குறை 29.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இது கடந்தாண்டு அக்டோபரைவிட சற்றே குறைவாகும். இந்தியாவில் நுகர்வு அதிகரிப்பதுடன் உலக பொருளாதாரத்தைவிட இரட்டிப்பு மடங்காக மக்கள் பொருட்களை இந்தியாவில் வாங்குவதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை சரிவால் ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுனில் தெரிவித்துள்ளார். உலகளவில் மந்தமான சூழல் காணப்பட்டாலும், இந்தியா மட்டும் விடிவெள்ளியாக இருப்பதாக பார்த்வால் தெரிவித்துள்ளார்.
சீனா தற்போது மந்தநிலையை நோக்கி செல்லும் நிலையில், இந்தியாவில் சேவைத்துறை ஏற்றுமதி 7%உயர்ந்து 30.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. அதே நேரம் சேவைத்துறையில் இறக்குமதி 4%க்கும் குறைவாக அதாவது 15.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. மின்சாதன பொருட்கள், மருந்து, பொறியியல் சாதனங்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவும் இந்தியா எக்சிம் வங்கியின் நிர்வாக இயக்குநர் தீபாளி அகர்வால்