10 மடங்கு வளரும் டிரென்ட்…
trent என்ற நிறுவனம் 10 மடங்கு வரை வளரும் என்று அதன் தலைவர் நோயல் டாடா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் அது எப்போது நடக்கும் என்பதை தம்மால் சொல்ல முடியாது என்றும் குறிப்பிட்டார். டாடா குழுமத்தில் இருந்து உருவாகியுள்ள இந்த நிறுவனம் 250 விழுக்காடு வளர்ச்சை கடந்த ஓராண்டில் பெற்றுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் இந்த நிறுவன பங்குகள் 6,776 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2.40டிரில்லியன் ரூபாயாக உள்ளது. இந்த நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை பலமடங்கு உள்ளதாக கூறியுள்ள நோயல், இந்த நிறுவனத்தின் லாபம் 82 விழுக்காடாக உள்ளதாகவும் ஆயிரத்து 29 கோடி ரூபாயாக லாபம் மார்ச் மாதம் வரை பதிவானதாகவும் கூறியுள்ளார். சுடியோ நிறுவனத்தை டாடா நிறுவனம் 2016-ல் அறிமுகப்படுத்தியது. பிழைகளில் இருந்து பாடம் கற்றுள்ள இந்த நிறுவனம், இந்தியாவில் 559 கடைகளை, 169 நகரங்களில் நிறுவியுள்ளது. சுடியோ நிறுவனத்தின் சராசரி விற்பனை 500 ரூபாயாக உள்ளது. 67 வயதாகும் நோயல், முகேஷ் அம்பானி, குமார் மங்கலம் பிர்லாவுக்கு போட்டியாக இதே துறையில் அசத்தி வருகிறார். அடுத்த தலைமுறை வியாபாரிகளை வழிநடத்துவது பெருமை அளிப்பதாக நோயல் டாடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.