இந்திய சந்தைகளுக்கு வந்த சோதனை..
இந்திய பங்குச்சந்தைகள் ஜனவரி 2ஆம் தேதி மிகப்பெரிய சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 379 புள்ளிகள் குறைந்து 71,892 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 76 புள்ளிகள் சரிந்து 21665புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தொடக்கம் முதலே இந்திய சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டது. கடைசி நேரத்தில் பங்குகளை சிலர் வாங்கியதால் சரிவு மீண்டது. Eicher Motors, M&M, UltraTech Cement, L&T, Kotak Mahindra Bank ஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன. Coal India, Adani Ports, Sun Pharma, Divis Labs,Ciplaஆகிய நிறுவன பங்குகள் பெரிய லாபத்தை பதிவு செய்தன. மருந்துத்துறை பங்கு அதிகபட்சமாக 2.5விழுக்காடு சரிந்தது. இது மட்டுமின்றி ரியல் எஸ்டேட், வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் தலா 1 விழுக்காடு குறைந்தது.
ST, Arihant Super, Bhansali Engineering, GlaxoSmithKline Pharmaceuticals, Godrej Industries, GSFC, Gujarat State Petronet, JBM Auto, Lemon Tree, Lupin, Mankind Pharma, Satin Credit, Sigachi Industries, Subros, Sun Pharma Advanced ஆகிய நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத உயர்வை கண்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஜனவரி 2ஆம் தேதி சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் விலை உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் சென்னையில் 5920 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 47ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு முன்தின விலையைவிட 30 காசுகள் உயர்ந்து 80 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 300ரூபாய் அதிகரித்து 80 ஆயிரத்து 300ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். இன்றைய சூழலில் மோசமான சில நண்பர்களைவிட பங்கம் செய்யாத ஒரே பொருள் தங்கம்தான் என்பதை நினைவில் கொள்ளவும்