அலைக்கற்றை ஏலத்தின் அப்டேட்..
காற்றுக்கும் காசு வாங்கும் சூழல் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு அடிபட்டது தான் தற்போது அலைக்கற்றை ஏலமாக மாறியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. தொலை தொடர்புத்துறை அலைக்கற்றை ஏலத்தை வரும் மே 20 ஆம் தேதி நடத்த திட்டமிட்டு உள்ளது. இந்த அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்று ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் சிம்கார்டு சேவைகளை செய்ய இயலும். இதன் ஒரு பகுதியாக ஏலத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு திறந்தநிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது e800மெகாஹெர்ட்ஸ், 900,1800,2100,2300,2500,3300 மெகா ஹர்ட்ஸ் மற்றும் 26 ஜிகா ஹர்ட்ஸ் அளவுள்ள அலைக்கற்றைகள் திறந்தநிலையில் ஏலம் இடப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலே கூறிய அலைக்கற்றைகளை ஏலம் எடுக்க தற்போது சந்தையில் உள்ள முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பிட்ட இந்த அளவுகள் கொண்ட அலைக்கற்றைகள் பெறுவதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்க சிம்கார்டு சேவை அளிக்கும் நிறுவனங்கள் திட்டம் தீட்டியுள்ளன.