புத்தாண்டு முதல் புது மாற்றம்..
இணைய வசதி இல்லாமல் பணத்தை அனுப்பி வைக்கும் வசதிக்கு யுபிஐ123 என்று பெயர்.இந்த வகை பரிவர்த்தனைகள் பட்டன் போன்களில் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி இந்த பணத்தின் பரிவர்த்தனைகள் அளவு 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஐவிஆர் மூலமாக பணத்தை அனுப்பும் முறையும், மிஸ்டு கால் மூலம் பணம் அனுப்பும் முறை, சத்தம் அடிப்படையிலான தொழில்நுட்பமும் இயங்க இருப்பதாகவும், ஓஈஎம் அடிப்படையிலான அப்ளிகேஷன்கள் மூலமாக பணம் அனுப்ப முடியும். இந்த புதிய வசதிகள் வரும் புத்தாண்டு முதல் அமலுக்கு வர இருப்பதாக தேசிய பணப்பரிவர்த்தனைக்கழகம் அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பணத்தின் பரிவர்த்தனை அளவு 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதார் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய பர்பஸ் கோட் வெளியிடப்பட்டுள்ளது. இனிஷியேசன் சேனல் என்ற வகையும் மாற்றப்பட்டிருந்தது. யுபிஐ 123 தவிர்த்து, யுபிஐ லைட் என்ற வசதியில் அண்மையில் வாலட் தொகை 2ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. பரிவர்த்தனை வரம்பு 500 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. யுபிஐ பணப்பரிவர்த்தனையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளையும் ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.