யுபிஐ சர்க்கிள்ஸ் என்ற புதிய வசதி அறிமுகம்..
தேசிய பணப்பரிவர்த்தனை கழகமான என்பிசிஐ, யுபிஐயில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ஒரு நபருக்கு பதிலாக இன்னொருவர் பணம் செலுத்த முடியும். ஒரு யூபிஐ கணக்கில் ஒரு நபர் முதன்மையானவராகவும், இரண்டாவது நபர் கிளை நபராகவும் சேர்க்க முடியும். இரண்டாவதாக சேர்க்கப்படும் நபர் ஏற்கனவே செட் செய்த அளவுக்கு பணத்தை பரிவர்த்தை செய்ய இயலும் என்பதே யுபிஐ சர்க்கிள்ஸின் சிறப்பம்சமாகும். பெற்றோர் தங்கள் குழந்தைகளையும், பிசினஸ் செய்வோர் தங்கள் வீட்டு உபயோக பொருட்கள் மளிகை வாங்க குடும்ப உறுப்பினரையும் சேர்க்க முடியும். இதன் மூலம் சிறுவணிகர்கள் தங்கள் பரிவர்த்தனைகளை சரியாக செய்வதுடன் அதனை நிர்வகிக்கவும் முடியும் என்று கூறப்படுகிறது. பலரும் தினசரி தேவைகளுக்கு ரொக்கப்பணத்தை நம்பி இருக்கும் சூழலை தவிர்க்கவே இந்த புதிய டிஜிட்டல் முயற்சி கையில் எடுக்கப்பட்டுள்ளது. குடும்ப செலவுகளை நிர்வகிக்கும் குடும்பத் தலைவர்களை, தலைவிகளை மனிதல் கொண்டு இந்த வசதியை தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் உருவாக்கியுள்ளது. வங்கிக் கணக்குகள் இல்லை என்றாலும் இந்த வசதியை செய்ய முடியும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.