நேபாளிலும் யுபிஐ..
இந்திய தேசிய பணப்பரிவர்த்தனைக்கழகமான என்பிசிஐ மார்ச் 8 ஆம் தேதி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் யுபிஐ பணப்பரிவர்த்தனை செய்ய வகை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் உள்ள கடைகளிலும் இந்தியர்கள் இனி கியுஆர் கோடுகளை ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் உள்ள பண பரிவர்த்தனை நிறுவனமான PHONEPAY நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவை தற்போது அமலுக்கு வந்துள்ளது. அந்நாட்டு கடைகளுக்கு இந்திய சுற்றுலா பயணிகள் சென்றாலும் அங்கும் இந்த சேவை இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சேவை புரட்சிகரமானது என்று இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இருநாடுகளுக்கும் இடையே உள்ள பந்தத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த புதிய சேவை அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் யுபிஐ பரிவர்த்தனை முறை அமலுக்கு வந்துள்ளதன் மூலம் பொருளாதார உறவு, வணிகம், சுற்றுலா ஆகியவை மேம்படும் என்றும்,தெளிவான நிலையான வளர்ச்சி இருக்கும் என்றும் fONEPAYநிறுவன முதன்மை செயலாளர் திவாஸ் குமார் தெரிவித்துள்ளார்.