வரி விதிப்பு குறித்து விசாரணை..

அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் புதுப்புது அதிரடிகளை செய்து வரும் டிரம்ப், இந்த வரிசையில் அண்மையில் பரஸ்பர வரி விதிப்பை அறிவித்துஅடுத்த நாளே 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மருந்து, செமிகண்டக்டர்கள் உள்ளிட்டவற்றின் மீது இறக்குமதி வரி விதிப்பது குறித்து விசாரணை தொடங்கியிருக்கிறது. தேசிய பாதுகாப்பு, உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த விசாரணை நடத்தப்படுகிறது. இது தொடர்பான பொது அறிவிப்பு கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. 21 நாட்கள் பொதுமக்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம் என்றும், காப்பர், ஸ்டீல் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட வரிவிதிப்பில் சில பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. அடுத்த வாரத்திலேயே செமிகண்டக்டர் மீதான வரி குறித்து வெளியாகும் என்று டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் மருந்து மற்றும் செமிகண்டக்டர் மீதான வரிவிதிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிப் தயாரிப்பில் தைவானை அமெரிக்கா நம்பியுள்ளது. மருந்துப் பொருட்கள் மீது கை வைத்தால் அது விலை ஏற்றத்துக்கு வழிவகுத்து பொதுமக்களுக்கு எட்டாத நிலைக்கு செல்லும் என்று மக்கள் அதிருப்தியை வெளிபடுத்தத் தொடங்கியுள்ளனர். எனினும் வெளிநாட்டினரை நம்பாமல், அனைத்து மருந்துகளையும் அமெரிக்காவிலேயே தயாரிக்க டிரம்ப் விரும்புகிறார்.