வேதாந்தா நிறுவன பத்திர மதிப்பு குறைப்பு..
மூடிஸ் என்ற நிறுவனம் மதிப்பீட்டில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனம் அண்மையில் வேதாந்தா நிறுவனம் வெளியிட்ட பத்திரத்தின் மதிப்பை குறைத்திருக்கிறது. caa2 நிலையில் இருந்து caa3என்று மதிப்பை குறைத்திருக்கிறது.
வேதாந்தா நிறுவனத்தின் கடனை குறைக்க பல கட்ட முயற்சிகளை நிறுவனம் எடுத்து வரும் நிலையில் அதன் மதிப்பை குறைக்கவேண்டியிருப்பதாக மூடீஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் கவுஷ்தப் சவுபால் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தான் 4 வகையான பத்திரங்களை வெளியிட பிரிட்டனில் வேதாந்தா குழுமம் அனுமதி பெற்றிருந்தது.
இந்த நிலையில் மூடிஸ் நிறுவன தரவுகள் வேதாந்தா நிறுவனத்துக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 2025-2026 காலகட்டத்தில் முதிர்ச்சியடையும் வகையில் பல்வேறு திட்டங்களை வேதாந்தா நிறுவனம் பங்குகளை வெளியிட முடிவெடுத்தது. போதுமான நிதி இல்லாமல் தவிக்கும் வேதாந்தா நிறுவனத்தின் பணப்புழக்கம் குறைந்ததே மூடிஸ் நிறுவன அறிக்கைக்கு காரணமாக கூறப்படுகிறது. அடுத்த 24 மாதங்களில் திவாலாகும் சூழலில் இருந்து தப்பிக்க நடவடிக்கைகளை வேதாந்தா நிறுவனம் எடுக்கும் என்று எதிராப்ர்க்கப்படுகிறது. இதற்கிடையில் மூடிஸ் நிறுவனத்தின் அறிக்கை பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.