இது ஜாம்பவானின் அட்வைஸ்..
உலகின் மிகப்பெரிய முதலீட்டாளரான வாரன் பஃப்பெட் அண்மையில் முதலீடுகள் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் சந்தையில் ஏற்படும் சிறிய ஏற்றத்தாழ்வுகளை பற்றி கவலைப்படாமல் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். நீண்டகால முதலீட்டாளராகவே இருப்பது நல்லது என்றும் அவர் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அண்மையில்தான் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து 50 விழுக்காடு பங்குகளை வாரன் பஃப்பெட் திரும்பப்பெற்றுக்கொண்டார். சந்தையில் ஏற்படும் சரிபார்ப்புகளை பற்றி கவலைப்பட்டால் நீங்கள் பங்குகளை வைத்திருக்கவே முடியாது என்றும் வாரன் தெரிவித்தார். ஒரு பங்கை வாங்கிவிட்டு 20 ஆண்டுகள் அமைதியாக இருந்தால் போதும், அதை தினசரி எடுத்து பார்த்துக்கொண்டே இருக்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். லோ காஸ்ட் இன்டக்ஸ் ரக ஃபண்ட்களில் முதலீடு செய்தால் அது நல்ல பலன்களை தரும் என்றும் தெரிவித்துள்ளார். குறைந்தளவுள்ள பங்குகளை தொடர்ந்து வாங்கிப்போடுவதை வாடிக்கையாக கொள்ள வேண்டும் என்று கடந்த 2017 ஆம் ஆண்டே வாரன் தெரிவித்திருந்தார். கடந்த மே மாதத்திலும் இதையேதான் வாரன் குறிப்பிட்டார். குறைந்த ரிஸ்க் இருக்கும் என்று நினைக்காமல் முதலீடுகளை செய்தால் நிறைய பணம் கிடைக்கும் என்றும் வாரன் தெரிவித்துள்ளார்.