தவறுகளில் இருந்து பாடம் கற்ற வாரன்..

முதலீட்டுத்துறையில் உலகளவில் ஜாம்பவானாக இருக்கும் வாரன் பஃப்பெட், தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றதாக உருக்கமாக கூறியுள்ளார். நியூ இங்கிலாந்து டெக்ஸ்டைல் நிறுவனம் வணிகம் செய்ய முடியாமல் தடுமாறியபோது, உள்ளே நுழைந்த வாரன் பஃப்பெட் தற்போது அதனை பெரிய சாம்ராஜ்ஜியமாக மாற்றியுள்ளார். தனது பங்குதாரர்களுக்கு கடந்த சனிக்கிழமை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் பல தவறுகளை பல ஆண்டுகளாக செய்துள்ளதாகவும், ஆப்பிள் மற்றும் பேங்க் ஆப் அமெரிக்கா நிறுவன பங்குகளை விற்று தன்வசம் 334.201 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். பெர்க்ஷைர் நிறுவனம் 5 ஜப்பானிய நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாகவும் கூறினார். 13.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துவந்த தாம், தற்போது 23.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை இந்த ஜப்பானிய நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக கூறியுள்ளார். வழக்கமாக ஆண்டுதோறும் பங்குதாரர்களை அழைத்து கலந்துரையாடும் பஃபெட், இந்தாண்டு அந்த நிகழ்ச்சியின் நேரத்தை மே மாதம் நடத்த திட்டமிட்டுள்ளார். 94 வயதாகும் வாரன் வரும் மே மாதத்தில் ஒரு நாளில் மட்டும் காலை 8 மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.