22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஊழியர்களை ஆபிஸ் கூட்டி வர படகு வாங்க போறோம்…..

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மாதம் 30ம் தேதி கொட்டித்தீர்த்த கனமழையால் வணிகம் வெகுவாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக அந்த மாநிலத்துக்கு பெரிய வருவாய் ஈட்டித்தரும் ஐ.டி நிறுவனங்கள் அமைந்திருந்த அவுட்டர் ரிங் ரோடு பகுதி வெகுவான பாதிப்பை சந்தித்தது. மழை வெள்ளத்தில் பயணித்தும் கூட சில ஊழியர்கள் கடமையே கண்ணாக பணிக்கு வந்திருந்தனர். சிலர் ஜேசிபி இயந்திரங்களிலும் பயணித்து பலரின் கவனத்தை ஈர்த்திருந்தனர். இந்த சூழலில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை மீட்கவும்,அவர்களின் குடும்பத்தினரை மழை வெள்ளத்தில் இருந்து வெளியேற்ற ரப்பர் படகுகளை வாங்கியுள்ளனர். மழை, பெருவெள்ளம் உள்ளிட்ட அவசர காலங்களில் இவ்வகை ரப்பர் படகுகள் பயன்படும் என்பதால் பல ஐடி நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்காக படகுகள் வாங்கி வருகின்றன.
அண்மையில் அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் வழக்கத்துக்கு மாறாக மழை கொட்டியதாலும்,வடிகால் வசதிகள் சரிவர இல்லாத்தாலும் ஐடி ஊழியர்கள் டிராக்டர்கள் மூலம் வெளியேறியது பேசுபொருளானது. இந்த சூழலில் ரப்பர் படகுகளை ஐடி நிறுவனங்களே வாங்கியிருப்பது ஆச்சர்யமாக காணப்படுகிறது. குறிப்பிட்ட 17 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக 5 மணிநேரம் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். அன்று ஒரு நாள் மட்டும் 225 கோடி ரூபாய் அளவுக்கு வணிகம் நஷ்டமடைந்ததாக அறிக்கை வெளியான நிலையில் எப்படியாவது பணி நடக்க வேண்டும் என ஐடி நிறுவன ஊழியர்கள் அடுத்த லெவலில் யோசித்தது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *