1 லட்சம் பேருக்கு கொடுக்க போகிறோம்!!!

எச்&எல் விசாக்களில் அமெரிக்கா செல்ல ஏராளமானோர் போட்டா போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வகை விசாக்களுக்காக விண்ணப்பிக்க 1 லட்சம் அப்பாயிண்ட்மெண்ட்களை அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது
முதல் 9 மாதங்களில் இந்தியாவில் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் அமெரிக்கா செல்ல விண்ணப்பித்து நேர்காணல்களை சந்தித்து உள்ளதாக அமெரிக்கதூதரகம் தெரிவித்துள்ளது
இந்தியர்கள் அமெரிக்காவுக்கு பணி தேவைகளுக்காக விசாவுக்காக காத்திருக்கும் காலம் அதிகம் இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் அமெரிக்க வெளியுறவு அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டி இருந்தார். உடனடியாக களத்தில் இறங்கிய அமெரிக்க அதிகாரிகள் 1 லட்சம் அப்பாயிண்மெண்ட்களை அள்ளி வீசியுள்ளனர்
அடுத்து வரும் வாரங்களில் ஒவ்வொரு 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை தங்கள் இணையதளத்தை சரிபார்க்க வேண்டும் என்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வணிக காரணங்களுக்கு அமெரிக்கா செல்ல விரும்புவோர் தற்போதுள்ள சூழலில் 884 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது
அமெரிக்காவில் தங்கி பணியாற்ற உதவும் எல்1,மற்றும் எச்1பி விசாக்களில் அமெரிக்கா செல்லத்தான் அதிகம் பேர் விரும்புகின்றனர்.
இந்த நிலையில் இந்த இரண்டு விசாக்கள் குறித்த அப்பாயிண்ட்மெண்ட் அறிவிப்பு, அமெரிக்கா செல்ல விரும்புவோர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.