நாங்க அபராதத்த ஏத்துக்க மாட்டோம்: ஏர் இந்தியா..
குறிப்பிட்ட சில வழித்தடங்களில் பாதுகாப்பு இல்லாமல் விமானங்களை இயக்கியதாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் அண்மையில் 1 கோடியே 10லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இந்த அபராதத்தை ஏற்க முடியாது என்றும், பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது அண்மையில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இயக்கப்பட்ட போயிங்க் 777 ரக விமானத்தில் ஆக்சிஜன் உதவி உள்ளிட்ட உதவிகள் இல்லாமல் விமானம் இயக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனை அந்நிறுவன விமானி ஒருவரே எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. முழுமையான பாதுகாப்பு அம்சங்களுடன்தான் விமானங்கள் இயக்கப்பட்டதாகவும், விமான போக்குவரத்து இயக்குநரகம் விதித்த அபராதம் ஏற்க முடியாதது என்றும், மேல்முறையீட்டுக்கு செல்ல இருப்பதாகவும் ஏர் இந்தியா குறிப்பிட்டுள்ளது. மேல்முறையீடு செய்ய தங்கள் நிறுவனத்துக்கு முழு உரிமை உள்ளதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. ஒரு வாரத்துக்குள்ளேயே இரண்டாவது முறையாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்தியாவில்தான் விசித்திரமான பல சம்பவங்கள் விமான நிறுவனங்களில் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் இது போன்ற சிக்கல்களை சமாளிக்க முடியாமல் சிறு சிறு விமான நிறுவனங்கள் நாட்டை விட்டே ஓட்டம்பிடித்துள்ளன. தற்போது போட்டியில் இண்டிகோவும், ஏர் இந்தியாவின் பங்களிப்புத்தான் மிகப்பெரிய அளவாக இருக்கின்றன.