என்ன!!! 1.29 லட்சம் கோடி கடன் தள்ளுபடியா????
நாட்டின் 4-வது பெரிய பொதுத்துறை வங்கியாக உள்ளது கனரா வங்கி.இந்த வங்கியில் கடந்த 11 ஆண்டுகளாக வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் அளவும்(1.29 லட்சம் கோடி ரூபாய்),பட்டியலும் மிகப்பெரியதாக உள்ளது.
இந்த வங்கியில் 100கோடி ரூபாய் அல்லது அதற்கும் மேற்பட்ட தொகையை கடனாக வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாத நபர்களின் பட்டியல் தேவை என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேள்வி எழுப்ப ஆர்வலர்கள் முற்பட்டனர். அதற்கு பதிலளிக்க முடியாது என்று கனரா வங்கி தரப்பில் பதில் கூறப்பட்டுள்ளது.
ஆர்டிஐ சட்டத்தின்படி தகவல்அளிக்க மறுப்பது சட்டப்படி குற்றம் என்றாலும் அதனைப்பற்றியெல்லாம் கனரா வங்கி கண்டுகொள்வதாக இல்லை.
ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான தொகையை வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்த முடியாதோர் பட்டியலை நாளிதழ்களில் வெளியிடும் இதே வங்கி 100 கோடி ரூபாய்க்கும் மேல் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாதவர்கள் பட்டியலை வெளியிடாமல் உள்ளது வியப்பளிப்பதாக புனேவைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் விவேக் வேலான்கர் என்பவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் கனரா வங்கி அளித்த கடனில் 19 %கடனை மட்டுமே வசூலித்துள்ளதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.