வேலை மாற இளைஞர்கள் சொல்லும் காரணங்கள் என்ன? படிச்சி பாருங்க அசந்துடவீங்க…
இந்திய அளவில் வேலைவாய்ப்பில் கொடிகட்டி பறக்கும் நிறுவனமாக உள்ளது நாக்ரி டாட்காம்.இந்த நிறுவனம் அண்மையில் அதன் பயன்பாட்டாளர்கள் மற்றும் ஊழியர்கள் 4 ஆயிரத்து 600பேரிடம் கருத்துகளை கேட்டு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதன்படி ஒரு நிறுவனத்தில் தனிநபர் வளர்ச்சி இல்லாமை,மோசமான பணி சூழல் மற்றும் மிகமோசமான பாஸ் ஆகிய 3 காரணங்களால் இளைஞர்கள் வேறு வேலையை தேட முக்கிய காரணமாக நாக்ரி டாட்காம் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது
அதே நேரம் ஒரே நிறுவனத்தில் நீண்டகாலம் இருக்கும் பணியாளர்கள் நிறுவனத்தில் தனக்கென புதிய வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது
பழைய நிறுவனத்தில் இருந்து வெளியேற முக்கியமான காரணமாக உள்ளது, தனிநபர் வளர்ச்சி இல்லாமை என்கிறது அந்த புள்ளி விவரம் 41 விழுக்காடு பேர் இதன் காரணமாக வேறு வேலை தேடிக்கொள்கின்றனர்
நிறுவனங்களின் மோசமான கொள்கைகள் மற்றும் மோசமான பணி சூழல் காரணமாக 34 விழுக்காடு பேர் பணி மாறுகின்றனர். மோசமான பாஸ் இருப்பதன் காரணமாக பணியில் இருந்து விலகி வேறு நிறுவனத்தில் சேர்வதாக 33 விழுக்காடு பேர் தெரிவிக்கின்றனர்
வேலையையும் குடும்பத்தையும் கவினிக்க உதவும் மேலாளர்களைத் தான் பணியாளர்களுக்கு மிகவும் பிடிப்பதாக கூறுகிறது ஆய்வு
ஆடவர் மற்றும் பெண் பாஸ்களில் பெரும்பாலானோர் ஆண் பாஸ்தான் புரிந்துகொள்வதாக கூறியுள்ளனர். எளிதில் அனுகக்கூடிய ஆண் மேலாளரைத்தான் பலருக்கும் பிடிப்பதாகவும் அந்த நிறுவனம் கூறுகிறது.