இந்திய சந்தைகள் சரிய காரணங்கள் என்ன..
இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு தொடர்ந்து வருகிறது. இதற்கு பிரதானமான காரணங்களாக நிபுணர்கள்கூறுவதை பார்க்கலாம். முதலாவதாக சர்வதேச முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து அதிகம் தொகை வெளியே எடுக்க பிரதான காரணமாக அமெரிக்க அதிபர் தேர்தலை குறிப்பிடுகின்றனர். இதற்கு அடுத்தபடியாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்போக்கு முக்கியமானதாக கூறப்படுகிறது. இந்திய முதலீட்டாளர்களோ, மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் பல நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை எதிர்நோக்கியுள்ளனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும் முக்கிய காரணியாக கூறப்படுகிறது. இதைத்தாண்டி, இந்திய பொருளாதாரத்தில் நிதி பற்றாக்குறை என்பதும் முக்கிய காரணியாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் இதே நிலை நீடிக்கவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.