டாலருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்???? விஸ்வரூபம் எடுக்கும் பழைய பஞ்சாயத்து!!!!
உலகின் நிதி சக்கரம் சுழல்வதில் முக்கிய பங்காக அமெரிக்க டாலர் இருக்கவேண்டும் என பல நெடுங்காலமாக அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த சந்தோஷம் அவர்களுக்கு நெடுநாட்களுக்கு நிலைக்காது என்ற வகையில் பல நாடுகளும் அதிரடி காட்டி வருகின்றன. கச்சா எண்ணெய்,தங்கம் என எதை வாங்கினாலும் ஏன் அமெரிக்க டாலரை பயன்படுத்த வேண்டும் என்று சில நாடுகள் விழித்துக் கொண்டுள்ளன. அந்த வரிசையில் இப்போது ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவும் இணைந்துள்ளது. இதற்காக கானா நாடு புதிய யோசனையை முன்வைத்துள்ளது. பழைய காலங்களில் பொருட்களுக்கு பணத்துக்கு பதிலாக,நிகராக வேறு ஒரு பொருளை தருவது பண்டமாற்று முறை எனப்படுகிறது தற்போது கானாவும் இதையேதான் பின்பற்றுகிறது. கச்சா எண்ணெய் வாங்கினால் அதற்கு நிகராக பணம் வேண்டாம் அதற்கு நிகரான தங்கத்தை தரும்படி அந்நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளது. கானாவில் தற்போது அமெரிக்க டாலர் கையிருப்பு வெறும் 6.6பில்லியன் டாலராகத்தான் இருந்து வருகிறது. இந்த பணமும் விரைவில் தீர்ந்துவிடும் என்பதால் இந்த அதிரடி முடிவை கானா அரசு எடுத்துள்ளது. அமெரிக்க டாலருக்கு பதிலாக தங்கம் கிடைக்கும்பட்சத்தில் தங்கள் நாட்டு பணத்தின் மதிப்பும் உயரும்
எளிதாக தங்கத்தை விற்கவும் முடியும் என்பதால் கானா இந்த யோசனையில் இறங்கியுள்ளது. கடும் நிதி நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் கானா நாடு விரைவில் பொருளாதார இழப்பால் திவாலாகும் நிலையில் உள்ளது. இந்த சூழலில் தங்களுக்கு உதவ சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை கானா அரசு திட்டமிட்டுள்ளது.