பணவீக்கம் பற்றி ரிசர்வ் வங்கி ஆளுநர் சொல்வது என்ன?
இந்தியாவில் பணவீக்க அளவு இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு 4 விழுக்காடுக்கு கீழ் வரவில்லை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் உள்ள பிரெட்டன் உட்ஸ் கமிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பணவீக்கம் குறைந்து வருவது உலகளாவிய மீட்பு நடவடிக்கைகளை தாமதப்படுத்தும் என்று தெரிவித்தார். அதிகளவு ரியல் எஸ்டேட் துறையுடன் தொடர்பு வைத்திருக்கும் பிரபல வங்கிகள் ஷார்ட் செல்லர்களின் இலக்காக மாறுவார்கள் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். 2022ஏப்ரலில் இந்தியாவின் பணவீக்கம் 7.8%ஆக இருந்ததாகவும், ஆனால் 4 விழுக்காடுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டதாகவும் கூறியுள்ளார். நுகர்வோர் விலை குறியீடு 2023-24 காலகட்டத்தில் 5.4 ஆக இருந்ததாகவும், 24-25 -ல் இது 4.5, 2025-2026 காலகட்டத்தில் 4.1 விழுக்காடாக இருக்கும் என்றும் தாஸ் கணித்துள்ளார்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் கடைசி கட்ட பணிகள் மிகவும் சவாலாகா இருப்பதாக கூறினார். உலகளாவிய ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படும் மாற்றங்களை ஆராய வேண்டும் என்றும் சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டார். இந்திய வங்கிகள் வணிக பயன்பாட்டு ரியல் எஸ்டேட் துறைக்கு அதிக கடன்கள் தந்துள்ளதாகவும், இது ஜூன் மாத இறுதி வரை 4.83லட்சம் கோடி ரூபாயாக இருப்பதாகவும் தெரிவித்தார்
வளைந்து கொடுக்கும் வகையிலான நிதித்துறையில் கட்டமைப்பு என்பது அடிப்படையில் தேவை என்றும், அப்படி அமைந்துவிட்டால் ரஸ்க் குறைவு என்றும் தெரிவித்தார். எதிர்காலத்தில் வரும் கரடு முரடான பாதையையும் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வோர் கவனிக்க வேண்டும் என்றும் சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டுள்ளார்.