சந்தையில் நடந்தது என்ன?
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று அதீத ஏற்ற இறக்கம் காணப்பட்டது. அமெரிக்க பங்குச் சந்தைகளைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தின் போது, 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகத்தை தொடங்கின. அதன் பின்னர் ஏற்ற இறக்கமாக இருந்த பங்குச் சந்தைகள், சற்று அதிகரிக்கத் தொடங்கின. வர்த்தக நேரம் முடிவில் 224 புள்ளிகள் வரை சரிந்து மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 60 ஆயிரத்து 347 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு நிப்டி 66 புள்ளிகள் சரிந்து 18,003 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது இந்திய பங்குச் சந்தைகளில் அதீத ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் பணவீக்கம் அதிகமாக இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில், இந்திய பங்குச் சந்தைகள் இன்று இந்த அதித ஏற்ற இறக்கத்தை சந்தித்தன. தங்கத்தின் விலையைப் பொறுத்தவரை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 4701 ரூபாய் என்ற நிலையிலும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 37 ஆயிரத்து 608 ரூபாய் என்ற நிலையிலும் உள்ளது. அதேபோல் முதலீட்டிற்கான 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5 ஆயிரத்தை 103 ரூபாய் என்ற நிலையிலும், 8 கிராம் 40 ஆயிரத்து 824 என்ற நிலையிலும் உள்ளது. வெள்ளியின் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 61 ரூபாய் 80 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 61,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.