தொடர்ந்து சரிந்து வரும் இந்திய சந்தைகள்..

அமெரிக்கா நடத்தி வரும் வணிக யுத்தம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டது. மெக்சிகோ மற்றும் கனடா மீதான 25விழுக்காடு கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அமல்படுத்தியுள்ளதால் உலகளவில் சமநிலையற்ற சூழல் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 92புள்ளிகள் சரிந்து 72ஆயிரத்து 989 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36 புள்ளிகள் குறைந்து 22ஆயிரத்து 082 புள்ளிகளாகவும் வர்த்தகம் முடிந்தது. Bharat Electronics, SBI, BPCL, Shriram Finance, Adani Enterprises உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தை பதிவு செய்தன. Bajaj Auto, Hero MotoCorp, Bajaj Finserv, Nestle,Eicher Motors நிறுவன பங்குகள் பெரிய சரிவை கண்டன. ஆட்டோமொபைல், ஐ.டி. FMCG நிறுவன பங்குகள் 1 விழுக்காடு வரை சரிவை கண்டன. Auto, Hero MotoCorp, Dalmia Bharat, Tata Communications, Hatsun Agro, Kansai Nerolac உள்ளிட்ட 570க்கும் அதிகமான நிறுவனங்க் கடந்த ஓராண்டில் இல்லாத சரிவை கண்டன. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை
சவரனுக்கு மேலும் 560 ரூபாய் உயர்ந்து 64 ஆயிரத்து 80 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராம், ஒரு ரூபாய் விலை உயர்ந்து 107 ரூபாயாக விற்பனையாகிறது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ 1லட்சத்து 7 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டி 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்