என்னது!!! துபாய் பக்கம் போகிறாரா அதானி?
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளவர் கவுதம் அதானி, குறுகிய காலகட்டத்தில் இந்திய பணக்காரர்களை வென்று
முதலிடத்தை எட்டிப்பிடித்த அதானி தனது செல்வாக்கை அதிகப்படுத்தும் நோக்கில் துபாய் அல்லது நியூயார்க்கில் ஒரு அலுவலகம் திறக்க திட்டமிட்டுள்ளார். இந்த அலுவலகம் தனது குடும்ப உறுப்பினர்களின் அலவல் சார்ந்து இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஒரே ஆண்டில் 58 பில்லியன் டாலர் பணம் அதானியின் குடும்பத்தில் சொத்தாக புதிதாக சேர்ந்துள்ளது.
ஹெட்ஜ் ஃபண்ட் மூலம் பணம் சம்பாதித்த ரே டாலியோ, செர்ஜே பிரின்,மற்றும் முகேஷ் அம்பானியும் இதே போன்ற குடும்ப உறுப்பினர்களுக்கான அலுவலகங்கள் சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தற்போது அதானி இணைந்துள்ளார். இது தொடர்பாக அதானியின் நிதி ஆலோசகர்களுடன் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. துபாயா இல்லை அமெரிக்காவா என்பது மட்டும் இதுவரை முடிவு செய்யப்படவில்லை. துபாய் என்றால் அதானிக்கு மிகவும் பழக்கமான இடமாக இருக்கும் என்றும் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி அங்கு பெரிய கோடீஸ்வரராக உள்ளதால் துபாயை கவுதம் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது 1980களில் வைர வியாபாரியாக வாழ்க்கையை தொடங்கிய கவுதம் அதானி கால்பதிக்கும் அனைத்துத் துறைகளிலும் லாபத்தை ஈட்டி கொடிகட்டி பறந்து வருகிறார்.