என்ன நடக்குது சந்தையில்?
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியை கண்டு வந்தது. இந்த நிலையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது
வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 684 புள்ளிகள் உயர்ந்து 57 ஆயிரத்து 919 புள்ளிகளாக வர்த்தகம் முடிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 17 ஆயிரத்து 185 புள்ளிகளில் வணிகம் நிறைவுற்றது
வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் குறிப்பிடத்தகுந்த ஏற்றத்தை கண்டன. தேசிய பங்குச்சந்தையில் இன்போசிஸ் நிறுவன பங்குகள் 4 விழுக்காடு வரை விலையேற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தையிலும் இன்போசிஸின் ஆதிக்கம் அதிகம் இருந்தது.
ஓஎன்ஜிசி நிறுவன பங்குகள் 1.73விழுக்காடு சரிவை சந்தித்திருந்தது.
ஆற்றல் மற்றும் ஆட்டோமொபைல் பங்குகள்வீழ்ச்சியை சந்தித்துள்ளன
தொடர் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று லாபத்தை பதிவு செய்ததால் முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வரும் வாரத்திலும் சாதகமான சூழல் நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.