INVIT என்றால் என்ன?
இன்விட் என்பது உள்கட்டமைப்பின் முதலீட்டு டிரஸ்ட் ஆகும். இது பற்றி பலரும் அறிந்திருக்காமல் இருக்கும் சூழல் உள்ளது
இதை ஏன் முதலீட்டாளர்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், நீங்கள் நிறுவனங்கள் குறித்து முதலீடு செய்யும்போது அது தொடர்பான ரிஸ்க் எவ்வளவு அதிகம் இருக்கும் என்று தெரிந்துகொள்ள இந்த இன்விட் உதவுகிறது.அதாவது இன்விட் என்பது பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் ஃபன்ட் போன்றதுதான், இன்விட் என்பது உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். ஆனால் மியூச்சுவல் பன்ட் என்பது நிறுவனங்களின் ஈக்விட்டியில் முதலீடு செய்யப்படும் இருவகையான முதலீடுகளிலும் முதலீட்டாளர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இன்விட்டில் சேமிக்கப்படும் பணம்,நெடுஞ்சாலைகள், மின்சார உற்பத்தியில் செல்லும், மியூச்சுவல் பன்ட்களில் ஏற்கனவே இத்தகைய சேமிப்பு வசதி இருந்தாலும் கூட இன்விட் வகை சேமிப்புகள் தெளிவான வருவாயை அளிக்கும் மியூச்சுவல் பன்ட்களில் வரும் ரிஸ்குகளை விட, இன்விட் வகையில் அபாயம் குறைவாகும்.
இன்விட் வகையில் சேமிப்பது எப்படி?
இன்விட்டில் சேமிப்பது பங்குச்சந்தைகளில் சேமிக்கப்படும் அதே மாதிரியான முதலீட்டுத்திட்டம் தான் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி அங்கீகரித்த பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் இன்விட் வசதி உள்ளது. டிவிடணட்,வட்டி,மூலதன ஆதாயம்,அரசு சார்ந்த ஊக்கத் தொகைகள்,நிரந்தர வருவாய் ஆகியன இந்த திட்டத்தில் உள்ளன.