டிரம்பால் இந்தியாவுக்கு ஆப்பா உண்மை நிலை என்ன?

அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் இந்தியா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து குறிவைத்து வரும் டிரம்ப், வரும் 2 ஆம் தேதி பதில் வரி விதிப்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் இந்தியாவில் அதனை தடுக்க எந்த முயற்சியையும் அதிகாரிகள் எடுத்ததாக தெரியவில்லை. பதில் வரியை விதிப்பது தொடர்பாக பிரெய்ட் பெர்ட் என்ற செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் வரும்2 ஆம் தேதி வரி விதிப்பதில் உறுதியாக இருப்பதாகவும், அதிகம் வரி விதிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முக்கியமான இடத்தில் இருப்பதாகவும் டிரம்ப் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளார். அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடியிடம் புதிய ஒப்பந்தங்கள் பற்றி பெரிதாக பேசாத அதிபர் டிரம்ப், பழைய ஒப்பந்தங்களில் குறிப்பாக வரியை அதிகரிப்பது குறித்தே பேசியதாக கூறப்படுகிறது. அமெரிக்க அரசு விதிக்கும் பதில் வரியால், தற்போது பெரிய வரி விதிக்கும் டெல்லி பரஸ்பர வரியை குறைக்கும் என்று தாம் நம்புவதாகவும் டிரம்ப் கூறினார். அமெரிக்கா பதில் வரி விதித்தால் இந்தியாவில் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. வரிகள் குறையும்பட்சத்தில் அமெரிக்காவுக்கு நல்ல செய்தியாக இருக்கும் என்றபோதிலும், சீனாவுக்கு அதிக ஆர்டர்கள் செல்லும் என்ற கவலையும் இருந்து வருகிறது.
பேச்சுவார்த்தைகளை மும்பையும் டெல்லியும் சரியாக செய்தால் இந்தியாவுக்கு பல சாதகமான சூழல்கள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்., போட்டி நாடுகளை விட இந்தியாவிக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். வரி விதிப்பால் பாதிப்பு தற்காலிகமாகவே இருக்கும் என்றும், அதனை நீண்டகாலமாக மாற்றும்போது பெரிய பாதிப்புகள் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். தாய்லாந்து, வங்கதேச நாடுகள் இந்தியாவுக்கு போட்டியாக வளர்க்கவே அமெரிக்கா விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.