இன்டஸ்இண்ட் வங்கி பங்கு உயர காரணம் என்ன?

முன்னணி வங்கிகளில் ஒன்றாக இருக்கும் இன்டஸ் இண்ட் வங்கியின் பங்குகள்செவ்வாய்க்கிழமை 8%வரை விலை உயர்ந்தது.கடந்தஒரு வாரத்தில் மட்டும் அந்த நிறுவனத்தின் பங்குகள் 20 விழுக்காடு விலை உயர்ந்துள்ளன. கடந்த மார்ச் 3 ஆம் தேதி ஓராண்டில் இல்லாத வகையில் குறைவான அளவாக 605 ரூபாய்40 பைசாவாக இந்த நிறுவன பங்குகள் இருந்தன. கடந்த காலாண்டான கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் மட்டும் இன்டஸ்இண்ட் வங்கியின் வெளிநாட்டு முதலீடுகளின் எண்ணிக்கை 5 விழுக்காடு உயர்ந்து 29.5%ஆக உயர்ந்துள்ளது. உள்நாட்டு பரஸ்பர நிதி, காப்பீட்டு நிறுவனங்கள், பென்சன் தொகை உள்ளிட்டவையும் இன்டஸ்இண்ட் வங்கியில் அதிகம் வைப்பு வைக்கப்பட்டன. சில்லறை பங்கு முதலீட்டாளர்களும் இந்த வங்கியில் 17.9%வரை முதலீடுகளை வைத்துள்ளன. கடந்த மார்ச்6 முதல் மார்ச் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் கணக்கிடுவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்குகள் 38 % வரை வீழ்ந்தன. என்ன நடந்தது என்பது பற்றி வங்கிக்குள்ளேயே பகுப்பாய்வும் நடத்தப்பட்டது. இது பற்றி ரிசர்வ் வங்கிக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் ஆராய்ந்த செபி கடந்த மாதம் 15 ஆம் தேதி, வங்கியின் நிதிநிலை நல்லதாகவே இருப்பதாக அறிவித்தது.
கடந்த நிதியாண்டு இன்டஸ்இண்ட் வங்கிக்கு சவால் நிறைந்ததாகவே இருந்தது. தற்போதைய காலகட்டத்தில் இன்டஸ் இண்ட் வங்கியின் பங்குகள்மலிவாக இருப்பதாகவும், குறு நிதிக்கான வாய்ப்புகளில் சவால் இருப்பதாகவும், அதே நேரம் இன்டஸ்இண்ட் நிறுவனத்தின் தலைமை மற்றும் வணிக மாடலில் மாற்றம் இருப்பதாகவும் சில தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம் என்ற நிலையில் இருந்து சற்று காத்திருக்கலாம் என்ற நிலைக்கும் சில தரகு நிறுவனங்கள் தெரிவித்தனர். ஒரு பங்கின் மதிப்பு 800 ரூபாய் வரும் வரை காத்திருக்கலாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.