ஹியூண்டாய் ஐபிஓவில் கவனிக்க வேண்டியது என்ன?
இந்தியாவின் மிகப்பெரிய ஆரம்ப பங்கு வெளியீடான ஹியூண்டாய் ஐபிஓ இன்று முதல் சந்தா தொடங்குகிறது. இந்தாண்டில் மட்டும் இந்தியாவில் 260 நிறுவனங்கள் 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் நிதியை திரட்டியுள்ளன. 14.2கோடி பங்குகளை விற்று அதன் மூலம் நிதி திரட்டப்படுகிறது. 1865 முதல் 1960 ரூபாய் என்ற வரம்புக்குள் ஒரு பங்கின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு முன்பாக முதலீட்டாளர்கள் சில காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. முதலில் அதிக மதிப்பு, 27 ஆயிரத்து 870 கோடி ரூபாய் நிதியை அந்நிறுவனம் திரட்ட இருக்கிறது.
இது மாருதி சுசுகியின் சந்தை மதிப்பை விட குறைவுதான், ஏனெனில் மாருதி நிறுவனத்தின் சந்தை மதிப்பு, ஹியூண்டாயைவிட 3 மடங்கு அதிக மதிப்பு கொண்டதாகும். 1960 ரூபாய் என்பது அதிகம் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். கிரே மார்கெட் பிரீமியம் குறையும்போது செலவு அதிகரிப்பதாகவும் முதலீட்டாளர்கள் யோசிக்கின்றனர். 14.2 கோடி பங்குகளை விற்றாலும் அந்த தொகை இந்தியாவுக்கு செல்லாமல் கொரியாவுக்குத் தான் செல்கிறது என்பதும், இதற்கு ஓவர் பில்டப் செய்யப்படுகிறதா என்பதையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கொரியாவுக்கு பணம் சென்றாலும், இந்தியாவில் உள்ள தங்கள் நிறுவனத்தில் புதிய பொருட்கள் உற்பத்திக்கு தான் இந்த பணம் செலவிடப்படும் என்றும் அந்நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஹியூண்டாய் நிறுவனம் 32,000கோடி ரூபாயை முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது. நீண்டகால முதலீடாக செய்ய விரும்புவோர் ஹியூண்டாய் ஐபிஓவை நம்பலாம் என்றும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.