ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டத்தில் பேசப்போவது என்ன…
ரிசர்வ் வங்கி அவ்வப்போது தங்கள் நிதி ஆலோசனைக்கூட்டத்தை கூட்டி முக்கிய முடிவுகளை எடுப்பது வழக்கம்.இந்த நிலையில் சர்வதேச அளவில் நிகழும் மாற்றங்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி கொள்கை முடிவை ரிசர்வ் வங்கி மாற்றி அமைக்க உள்ளது. இதன்படி செப்டம்பர் 30ம் தேதி அடுத்த எம்பிசி எனப்படும் நதி கொள்கை ஆலோசனை குழு கூட்டம் நடக்க உள்ளது. இதில் விவாதிக்கப்பட உள்ள முக்கிய அம்சங்கள் என்னவென்று இப்போது காணலாம்
- இந்திய ரூபாய் மதிப்பு மீளுமா இல்லை தொடர்ந்து சரியுமா?
- வெளிநாட்டு பண கையிறுப்பை எப்படி அதிகப்படுத்துவது?
- சில்லறை பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியமா?
- நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்துவது எப்படி?
- ரெபோ வங்கி விகிதம் உயர்த்தப்பட்டால் அது பொருளாதாரத்தில் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும், இல்லை ரெபோ ரேட் விகிதத்தை உயர்த்தலாமா போன்ற 5 மிகமுக்கிய பிரச்னைகளை ரிசர்வ் வங்கி ஆராய்ந்து வருகிறது
இதற்கான விடை இன்று அறிவிக்கப்பட உள்ளது. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள், வணிகர்கள், வங்கிகள் ஆகியோரின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏகிற வைத்துள்ளது ரிசர்வ் வங்கியின் நாளைய கூட்டமும் அதன் முடிவுகளும்