10லட்சத்துக்கு மேலே சென்றால் ஐ.டி என்ன செய்யும்..
இந்தியாவில் வருமான வரித்துறை வெறும் வரி வசூல் மட்டும் செய்யாமல் அபராதம் விதிக்கும் பணிகளையும் செய்து வருகிறது. ஒருவரின் வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்படுகிறது என்பதையும் வருமான வரித்துறை கண்காணிக்கிறது. இந்தியாவில் 10லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்திருந்தால் அதற்கு உண்டான வரி செலுத்தாதபட்சத்தில் அதற்கு தனி வரி விதிக்கவும் சட்டத்தில் இடம்உள்ளது. ஆனால் இதுவரை சட்ட நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை, மாறாக 10லட்சம் ரூபாய்க்கும் அதிகமான டெபாசிட் இருக்கும்பட்சத்தில் உடனே அந்த வங்கி வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிடும், நோட்டீஸ் அளித்து அதற்கு உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை எனில் அந்த தொகையில் 65 விழுக்காடு வரை வருமான வரியும், 25 விழுக்காடு சர் சார்ஜும், ஒரு நாளில் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக டெபாசிட் செய்தாலே வருமான வரித்துறைக்கு தகவல் சென்றுவிடும் 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டால் அதற்கு பேன் அட்டைகள் தேவையில்லை. அதற்கு மேல் சென்றால் பேன் அட்டை கட்டாயம். ஓராண்டில் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை மட்டுமே தனிநபர் தனது கணக்கில் ஆவணங்கள் இன்றி டெபாசிட் செய்யலாம் என்கிறது விதி.