2025-ல் தங்கம் விலை எப்படி இருக்கும்?

உலகளவில் பல்வேறு வித்தியாசமான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் பொருளாதாரம் நிலையற்றதாகவே இருக்கிறது. இந்த சூழலில்2025-ஆம் ஆண்டு தங்கம் விலை குறித்து உலக தங்க கவுன்சில் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது. உலகளாவிய உள்நாட்டு உற்பத்தி, கடன் பத்திரங்களில் இருந்து கிடைக்கும் வருவாய், பணவீக்கம் உள்ளிட்ட அம்சங்கள் நிலையற்ற சூழல் இருப்பதை உறுதி செய்வதுடன் சவால்கள் இருப்பதையும் தெளிவுபடுத்துகிறது. உலகளாவிய பதற்றம், வாடிக்கையாளர் முதலீடு மற்றும் தேவை ஆகியவை தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் அம்சங்களாக இருக்கிறது. எதிர்பார்த்ததை விட அதிகளவில் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கும்போது அதன் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. வலுவான நிதி கொள்கை, அதிகரிக்கும் வட்டி விகிதங்களும் தங்கம் விலை உயர்வை மேலும் வலுவாக்கும். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிபர் டிரம்ப், வணிகத்துக்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுப்பதால், உலக முதலீட்டாளர்கள் விழிப்புடன் இருக்கின்றனர். பணவீக்கம் மற்றும் நிர்வாகத்துறையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 100 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கும் முடிவில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் இருக்கும் என்று கூறப்படுகிறது. சீனாவில் பொருளாதார மீட்பு நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்தப்படுவதால் தங்கம் மீது ஆர்வம் இல்லை. அதே நேரம் இந்தியா வலுவான பொருளாதார வளர்ச்சி கொண்டநாடாகவும் திகழ்கிறது. தென்கொரியா மற்றும் சிரியா நாடுகளில் பதற்ற நிலை தொடர்கிறது. பொருளாதார விரிவுபடுத்தும் முயற்சியும், நிர்வாக செலவுகள் மற்றும் அது சார்ந்த நிகழ்ச்சிகள் தங்கத்தின் விலையை பதம்பார்க்கும்தற்போதைய சூழல் எப்படி இருக்கிறதோ அதே பாணியில்தான் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை அடுத்தாண்டும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய வங்கிகள் தங்கத்தை அடுத்தாண்டும் வாங்கும்பட்சத்தில் தங்கம் விலை நிச்சயம் உயரவே அதிகவாய்ப்புள்ளதாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது.