தட்டித்தூக்கும் தங்கம் விலை..

இந்திய பங்குச்சந்தைகள், செவ்வாய்க் கிழமை பெரிய ஏற்ற இறக்கமின்றி வர்த்தகத்தை முடித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2புள்ளிகள் உயர்ந்து, 81,510புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 9 புள்ளிகள் சரிந்து 24ஆயிரத்து 610 புள்ளிகளில் வணிகம் நிறைவுற்றது. . Bajaj Finserv, Infosys, HCL Technologies, Wipro,Shriram Finance உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்தன. Bharti Airtel, Adani Ports, Adani Enterprises, Dr Reddy’s Laboratories, HDFC Lifeஉள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு பெரிதாக வீழ்ந்தன. ஆற்றல், டெலிகாம், ஊடகத்துறை பங்குகள் அரை முதல் 1 விழுக்காடு வரை சரிந்தன. தகவல் தொழில்நுட்பம், உலோகம், பொதுத்துறை வங்கிகள், ரியல் எஸ்டேட்துறை பங்குகள் 0.4 முதல் 1 விழுக்காடு வரை உயர்ந்தன. Nippon Life India Asset Management, ITI, LTIMindtree, EID Parry, MphasiS, Lloyds Metals, BLS International, Persistent Systems, Piramal Enterprises, HCL Technologies, Wipro, Coforge, Indian Hotels, Max Healthcare, L&T, Krishna Institute of Medical Sciences,உள்ளிட்ட 280க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கம் விலை ஒரு கிராம் 75 ரூபாய் விலை உயர்ந்து 7205 ரூபாயாகவும், ஒரு சவரன் 57,640 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து 104 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சத்து 4 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.