ரிசர்வ் வங்கி, இந்தியாவுக்கு தங்கம் எடுத்து வருவது ஏன்?
இந்தியாவிடம் தற்போது 854.7டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. இதில் 510.5 டன் தங்கம் மும்பையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ளது. கடந்த 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் 2024 வரை தங்கத்தை வாங்குவதில் ரிசர்வ் வங்கி ஆர்வம் காட்டி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரிசர்வ் வங்கி, 214 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. இந்தியாவில் இத்தனை தங்கம் சேமிக்கப்பட்டாலும், பிரிட்டனில் இந்தியாவுக்கு சொந்தமான 314 டன் தங்கம் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஸ்விட்சர்லாந்தின் பாசெல் நகரில் தங்கம் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அமெரிக்காவில் உள்ள ஃபெடரல் ரிசர்வ் வங்கியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கடந்த 1991-ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்த இந்தியாவுக்கு சொந்தமான தங்கத்தை அப்போதைய அரசுகள் பாதுகாப்பாக இந்தியாவுக்கு எடுத்து வந்தன. அதன்பிறகு 2024-ல் இங்கிலாந்தில் இருந்த இந்தியாவுக்கு சொந்தமான தங்கம் விமானம் மூலம் எடுத்துவரப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது முதல் ரஷ்யாவுக்கு மேற்கத்திய நாடுகள் நெருக்கடி தரத் தொடங்கின. இதனால் இந்திய பணத்தின் மதிப்பும் சரியத் தொடங்கியது. போர்கள் காரணமாக விலைவாசிகளும் உயர்ந்தன. இந்த நிலையில் மிகவும் சிக்கலான காலகட்டத்தில் ஒரே நேரத்தில் தங்கத்தின் இருப்பால் இந்தியாவின் மீதான மதி்ப்பும் அதிகரிக்கும் என்பதால் தங்கம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் பிரிட்டனில் பொருளாதார நிலை மோசமடையக் கூடும் என்பதால் பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் அதிகளவில் இறக்கியுள்ளோம். இந்தியாவின் பணத்தின் மதிப்பை மேலும் வலுவாக்கவும், தேசிய செல்வம் மற்றும் பொருளாதார சமநிலையற்ற சூழலை சமாளிக்கவும் இந்தியாவுக்கு தங்கம் எடுத்துவரப்படுவது அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள்