தங்கம் விலை சரிவது ஏன்?காரணிகள் இதோ..
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது.
இந்திய மதிப்பில் 10 கிராமுக்கு 4,750 ரூபாய் குறைந்திருக்கிறது. அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்துகொண்டே செல்லும்போது தங்கத்தின் மீதான மதிப்பு வீழ்வது இயல்பாகும். அமெரிக்க மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதே டிரம்ப்பின் கொள்கையாகும். இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவிலேயே அதிக கச்சா எண்ணெய் உற்பத்தி, சீனா மீது அதிக வரிவிதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளும், அமெரிக்காவுக்கு வரும் நபர்களுக்கான குடியுரிமை கொள்கைகள் கடுமையாக்கப்படுவதும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சிறப்பம்சங்கள்., இந்த காரணிகளால் அமெரிக்க பொருளாதாரம் உயரும், அதேநே நேரம் மேலும் சில காரணிகளால் தங்கம் விலை சரிகிறது. 1)அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு வரை அமைதியாக இருந்த முதலீட்டாளர்கள், தேர்தல் முடிவுகள் வெளியானதும் லாபத்தை அதிகரிக்க முதலீடுகளை வெளியே எடுத்துவிட்டு ஓட்டம் பிடித்துவிட்டனர். 2.அமெரிக்க பணப்பற்றாக்குறை மேலும் அதிகரித்துக்கொண்டே செல்வதும் முக்கிய காரணியாகும்,
3) தங்கத்தில் இருந்த முதலீடுகளை பிட்காயின்களில் மாற்றிய முதலீட்டாளர்களாலும் தங்கம் மதிப்பு குறைந்துள்ளது. அமெரிக்க அரசு பிட்காயின்களுக்கு அங்கீகாரம் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
4.உலகளவில் நடந்து வரும் போர்கள் முடிவடையும் தருவாயில் உள்ளதும் தங்கம் விலை சரிய முக்கிய காரணியாக அமைந்துள்ளது. குறுகிய காலகட்டத்துக்கு மட்டுமே தங்கம் விலை சரிந்திருக்கும் என்று கூறும் நிபுணர்கள், அடுத்தாண்டு தொடக்கத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 3 ஆயிரம் டாலர் வரை கூட உயரும் என்று தெரிவித்துள்ளனர்.