நோயல் டாடாவுக்கு சிக்கில்..
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு பிறகு டாடா அறக்கட்டளையின் தலைவராக ரத்தனின் ஒன்று விட்ட தம்பியான நோயல் டாடா நியமிக்கப்பட்டார். எனினும் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக நோயல் டாடா ஆக முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதே சிக்கல் நோயலுக்கு ஏற்படுவது இது முதல் முறையல்ல..கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பே நோயலுக்கு இதே பிரச்சனை நிலவியது. கடந்த 2011-ல் ரத்தன் டாடா, டாடா சன்ஸில் இருந்து விலகிய போதும், நோயலுக்கு பதிலாக சைரஸ் மிஸ்டிரிக்கு தான் வழங்கப்பட்டது. ரத்தன் டாடா அறக்கட்டளையின் அறங்காவலராக நோயல் டாடா 2019-ல் நியமிக்கப்பட்டபோதும். நோயலுக்கு சிக்கல் ஏற்பட்டது. கடந்த 2022-ல் தோரப்ஜி டாடா அறக்கட்டளையில் தலைவர் பதவியை நோயல் ஏற்க முற்பட்டபோதும் சிக்கல் ஏற்பட்டது. பதவியை அவதூறாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் கடந்த 2022-ல் ஒரு விதி கொண்டுவரப்பட்டது. அதில் டாடா அறக்கட்டளை மற்றும் டாடா சன்ஸ் இரண்டிலும் ஒரே நபர் தலைவர் பதவி வகிக்க முடியாது என்று விதி கொண்டுவரப்பட்டது. இதனால் தற்போது டாடா அறக்கட்டளையின் தலைவராக உள்ள நோயல் டாடா, டாடா சன்ஸ் அறக்கட்டளைக்கு தலைவராக இயலாது. கடந்த 2022-ல் ரத்தன் டாடா மட்டுமே இரண்டு பதவிகளையும் ஒன்றாக நிர்வகித்த கடைசி நபராகும். டாடா சன்ஸில் டாடா அறக்கட்டளையின் பங்கு மட்டும் 66 விழுக்காடாக இருக்கிறது. எனவே டாடா அறக்கட்டளையில் 66 விழுக்காடு அதிகாரம் கொண்டவர் டாடா சன்ஸிலும் தலைவராக தொடர கடந்த 2022-ல் ரத்தன் டாடா ஒரு விதியை கொண்டுவந்தார். இதனால் நோயல் டாடாவால் டாடா சன்ஸின் தலைவராக இயலாது.