இந்தியாவுக்கு சாதக சூழல் கிடைக்குமா?

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியாவுடனான தடையற்ற வர்த்தகத்தில் MFN என்ற பிரிவு சலுகையை வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவுக்கு எப்படிப்பட்ட சலுகைகளை இந்தியா வழங்கி வருகிறதோ அதே பாணியில் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று அவர்கள் கேட்டு வருகின்றனர். பிரசல்ஸில் இது தொடர்பாக அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஒரே மாதிரியான இறக்குமதி வரி விதிக்கப்படும். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வரும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் டீல் கவனம் பெற்றுள்ளது.
பரஸ்பர வரியை அமெரிக்க அரசு அமல்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பாக இந்தியா, அமெரிக்கா நாடுகள் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. முன்னுரிமை அடிப்படையில் வரிகளில் பரஸ்பரம் குறைப்பு குறித்தும் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தையில் கடந்த காலங்களில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தை அண்மயைில் நடைபெற்றது. விவசாயப் பொருட்கள், மீன் ஏற்றுமதி, மருந்து, ரசாயனம், உரம், உடைகள், கார் உதிரி பாகங்கள் தயாரிப்பு குறித்தும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.