வங்கிக்கடன் வட்டி விகிதம் அதிகரிக்குமா?
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.அதில் வங்கிக்கடன்களின் வட்டி விகிதம் பற்றி பேசினார். வங்கிக்கடன்களின் வட்டி விகிதம் எளிதில் அனுக முடியாத அளவுக்கு இருந்ததாகவும்,அந்த நேரத்தில் தொழில்துறையை வளர்க்க தங்கள் தரப்பு விரும்பியதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்து வரும் ரெபோ வட்டி விகிதம் தற்போது வரை 6.50%ஆக இருக்கிறது. 10 நிதிக்கொள்கை கூட்டங்கள் முடிந்த போதிலும் வட்டி விகிதம் இதே அளவிலேயே இருக்கிறது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை நிச்சயம் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த சக்தி காந்ததாஸ், டிசம்பர் மாத நிதிக்கொள்கை கூட்டம் இருப்பதால் அது பற்றி தாம் பேசமுடியாது என்றார். வெங்காயம், தக்காளி உருளைக்கிழங்குகள் விலை ஏற்றம் ஆண்டுதோறும் குறிப்பிட்ட சில காலங்களில் இருப்பதாக நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் பணவீக்கம் கடந்த 14 மாதங்களில் இல்லாத வகையில் 6.2 %ஆக உள்ளது. இந்த உயர்வுக்கு அதிகரித்து வரும் காய்கனிகளின் பணவீக்கமே காரணமாகும். அடுத்த சில மாதங்களில் சில்லறை பணவீக்க குறியீடான சிபிஐ குறையும் என்று எதிர்பார்ப்பதாக சக்தி காந்ததாஸ் கூறியிருந்தார். ஆனால் தொடர்ந்து குறைந்து வருவதாக தெரியவில்லை.