ரிசர்வ் வங்கி கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்குமா?
இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் இரண்டு முன்மொழிவுகளை மத்திய அரசிடம் வைத்துள்ளது. அதில் ஆன்லைன் டெபாசிட்கள் மீது பணத்தை வழங்க ரிசர்வ் வங்கி கோரியுள்ளது. மேலும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் இருந்து சற்று தள்ளி இருக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. வங்கிகள் அளிக்கும் கடன்களின் வளர்ச்சி விகிதம் கடந்த சில ஆண்டுகளாக 14%ஆக உள்ளது. இந்நிலையில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக 5 விழுக்காடு அளவுக்கான தொகையை ஒதுக்குவது குறித்து கடந்த மே மாதமே ரிசர்வ் வங்கி ஒரு முன்மொழிவை அரசிடம் கொடுத்தது. இதேபோல் ஜூலை மாதத்தில் முன்வைத்த கோரிக்கைகளில் கூடுதலாக 5%டிஜிட்டல் டெபாசிட்களை ஊக்குவிக்க பயன்படுத்த அறிவுறுத்தியது. இதன் காரணமாக வங்கிகளில் பத்திரங்கள் அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு அளிக்க பணம் இல்லாத சூழல் ஏற்பட்டது. அதிக ரிஸ்குகள் உள்ள ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு கூடுதலாக 5% அளவுகளும், சோலார் மற்றும் புதுப்பிக்கத் தக்க திட்டங்களுக்கு அதிக வட்டி கூடாது என்றும் கூறப்படுகிறது. கடன் அளவு, பொருளாதாரம், மற்றும் வங்கித்துறை பங்குகளின் சுகாதாரம் உள்ளிட்டவற்றில் ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. ஆன்லைனில் செய்யப்படும் ரன் ஆஃப் குறித்தும் கண்காணிப்பு தேவை என்றும் அரசுக்கு ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.