பட்ஜெட்டில் ஜொலிக்குமா இந்திய நகைத் தொழில்…?
இந்தியாவில் விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட் பல்வேறு எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது. உலகிலேயே தங்கத்தை அதிகம் வாங்குவதில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்திய சந்தைகள் பழமையும் பாரம்பரியமும் நிறைந்தது என்கிறது உலக தங்க சங்கமான WGC.இந்தியாவில் உருவாகி வரும் இலகு ரக தங்க நகைகளுக்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொருட்கள் ஏற்றுமதி 15.71% பங்களிப்பை தருகிறது. இதேபோல் தங்க நகை உற்பத்தி 7% பங்களிப்பை தருகிறது. 2023-ல் மட்டும் இந்திய நகைகள் மதிப்பு 78.85 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இந்த துறையின் வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில் 5.24%வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தங்கம்,வெள்ளி மற்றும் வைரம் சார்ந்த துறை வேலைவாய்ப்புகளில் 46 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலனடைகின்றனர்.
இந்த நிலையில் பட்ஜெட்டில் நகை தொழிலாளர்கள் 4 அல்லது 5 காரணிகளை பட்டியலிடுகின்றனர்
1.போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
- தங்க நகை உற்பத்தியாளர்கள், நகை கலைஞர்களுக்கு அளிக்க வேண்டிய திறன் மற்றும் அது சார்ந்த உபகரணங்களுக்கு சலுகைகள் , சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தேவை உள்ளிட்ட அம்சங்களை பட்ஜெட்டில் வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
3.மேட் இன் இந்தியா திட்டத்தின் மூலம் சிறப்பு நிதி மற்றும் கடன் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதும் நகை செய்வோரின் கோரிக்கையாக இருக்கிறது.
4.அந்நிய செலாவனியில் மிகமுக்கிய பங்கு வகிக்கும் இந்திய நகை சந்தைகளை மேம்படு்த்த தொழில் நுட்ப உதவிகளையும் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைரங்கள் மற்றும் அது சார்ந்த இயந்திரங்களுக்கு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன.
வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடும் தங்கம்,வைரம் மற்றும் நகை செய்யும் தொழிலில் அதிகரிக்க வாய்ப்பு தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவை அனைத்துக்கும் பட்ஜெட்டில் என்ன சலுகை கிடைக்கப்போகிறது என்று எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.