அடிக்குமா ஜாக்பாட்..?
வாழ்க்கை முடிந்திவிட்டதாக கருதும்போது தான் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பார்கள், அது பைஜூஸ் மற்றும் பேட்டீ எம் நிறுவன பணியாளர்கள் விஷயத்தில் உண்மையாகி உள்ளது. இந்த 2நிறுவனக் கட்டமைப்பில் இருந்து 13,500பேர் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களை பணியில் எடுக்க பல நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இதேபோல் அண்மையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் பே டி எம் நிறுவன பணியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை கடந்த 31ஆம் தேதிக்கு பிறகு மாறியுள்ளது. இருப்பினும் உடனடியாக வேலை தேடுவோர் எண்ணிக்கை பே டி எம்மில் 800-1200ஆக உள்ளது. பைஜூசில் இருந்து வெளியேறியவர்கள் வேலை தேடும் எண்ணிக்கை 5,000ஆக உயர்ந்தது உள்ளது. வேலைக்கு ஆட்களை ஒரு பக்கம் நிறுவனங்கள் தேடினாலும், உடனடியாக அவர்களை பணியில் சேர்த்து லாபம் பார்ப்பது கடினம் என்றும் மற்றொரு பக்கம் கூறப்படுகிறது. இந்த இரு நிறுவனகங்ககளில் வேலை தேடுவோர் 5-10லட்சம் ரூபாய் அளவுக்கு சம்பளம் கேட்கின்றனர். இதில் 4ஆண்டுகளுக்கு குறைவாக , பணியாற்றுவோரின் எண்ணிக்கை 65%ஆக உள்ளது.பே டி எம்மில் இந்த அளவு 42%ஆக உள்ளது