விண்ட்ஃபால் வரி உயர்வு..
இந்தியாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயின் லாப வரி, ஒரு டன்னுக்கு ஆயிரத்து 300 ரூபாயில் இருந்து 2300ரூபாயாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதே நேரம் டெல்லி அரசாங்கம் டீசல் மற்றும் விமான டர்பைன் எரிபொருள் மீதான வரியை நீக்கியுள்ளது. மேலும் டெல்லியில் பெட்ரோல் மீதான விண்ட்ஃபால் வரி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விண்ட்ஃபால் டாக்ஸ் என்பது டீசல் மீது நீக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரு லிட்டருக்கு 1 ரூபாயும், பின்னர் அது 50 பைசாவாகவும் லிட்டருக்கு குறைக்கப்பட்டது. புதிய விலை ஜனவரி 2ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி சிறப்பு கூடுதல் கலால் வரி அமல்படுத்தப்பட்டது. அதாவது சிறப்பு வரி ஒரு டன் கச்சா எண்ணெய்க்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக ஆயிரத்து 300ரூபாயாக குறைக்கப்பட்டது. ஏற்றுமதி கலால் வரியும் லிட்டரு்கு 1 ரூபாயில் இருந்து 50 காசுகளாக குறைக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த ஜூலை 1 2022 முதல் விண்ட்ஃபால் வரி வசூலிக்கப்பட்டது. ஏற்றுமதி வரி லிட்டருக்கு 6 ரூபாயாக இருந்தது.,ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறை இந்த வரி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 75 டாலருக்கும் அதிகமாக செல்லும்போது விண்ட்பால் வரி விதிக்கப்படுகிறது. டீசல், விமான எரிபொருள் மற்றும் பெட்ரோல் மீது இந்த வரி விதிக்கப்படுகிறது. 20 டாலருக்கு மேல் ஒரு பேரலுக்கு மார்ஜின் கூடும்போதும் இந்த வரி வசூலிக்கப்படுகிறது.