அதிரடி மாற்றம் செய்து வரும் விப்ரோ..

செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் நடந்து வரும் நிலையில் இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ தனது உலகளாவிய வணிகத்தை மாற்றி அமைத்து வருகிறது. வரும் 1 ஆம் தேதி முதல் தொழில்நுட்ப சேவைகள், வணிக சேவைகள், ஆலோசனை சேவை மற்றும் பொறியியல் ஆகிய 4 பிரிவிகளில் கவனம் செலுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஃபுல் ஸ்ட்ரைடு கிளௌவுடு சேவை மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள், சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. புதிதாக திட்டமிட்டுள்ள பிரிவுகளுக்கு தலைவர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகளையும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளவில் நிலவி வரும் வணிக சமநிலையற்ற சூழல்காரணமாக தரவுகளை சீரமைத்தல் பணிகள் வளர்ச்சிக்கு முக்கியமானது என்று கூறப்படுகிறது. கிளவுடு மற்றும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை இணைப்பது முக்கியமான உத்தி என்றும், விப்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக வளர்ச்சியை கண்டாலும், மற்ற போட்டி நிறுவனங்கள் இரட்டை இலக்க வளர்ச்சியை கண்டுள்ளபோதும், தங்கள் நிறுவனம் 1இலக்கத்தை மட்டுமே கண்டுவருவதால் திட்டத்தை விப்ரோ நிறுவனம் மாற்றி அமைத்து வருகிறது.