22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

70% சரிந்த ஹியூண்டாய் பங்கு

25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு ஹியூண்டாய் நிறுவனம் தயாராகி வரும் சூழலில் அதன் ஜிஎம்பி மதிப்பு குறைந்துள்ளது. வரும் 15 முதல் 17 ஆம் தேிதிக்குள் ஹியூண்டாய் ஐபிஓ வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கள்ளச்சந்தையில் இதன் மதிப்பு 147 ரூபாயாக உள்ளது. அதிகபட்ச விலை ரூ.1960 ஆகவும் உள்ளது. கடந்த செப்டம்பரில் ஹியூண்டாயின் ஜிஎம்பி மதிப்பு 570 ரூபாயாக குறைந்தது. இது கடந்த வாரம் வெறும் 360 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் இந்த சரிவு மேலும் தொடர்ந்து 200ரூபாய்க்கும் குறைவாக சென்றது. இந்த ஜிஎம்பி மதிப்பு ஒரு குறியீடுதான். பிரதான சந்தையில் இருக்கும் வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கூறுவதுதான் ஜிஎம்பி. 1.6லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மதிப்பை ஹியூண்டாய் நிறுவனம் கொண்டுள்ளது. 14.2 கோடி பங்குகளை வெளியிட்டு அதனை விற்கவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் நிதியாண்டில் 60 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய், 4653 கோடி ரூபாய் லாபமும் அந்த நிறுவனம் கொண்டுள்ளது. Kotak Mahindra Capital, Citigroup Global, HSBC Securities, JP Morgan,Morgan Stanley உள்ளிட்ட நிறுவனங்கள் ஹியூண்டாய் ஐபிஓவின் லீடு மேனேஜர்களாவர். ஐபிஓ ஒதுக்கீட்டை வரும் 18 ஆம் தேதியும், பட்டியலிடுவது வரும் 22 ஆம் தேதியும் நடக்கட்டும் என்றும் ஹியுண்டாய் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் இரண்டு பிரதான பங்குச்சந்தைகளான மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளிலும் இந்த ஐபிஓ வெளியாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *