ஷாவ்மி அல்ட்ரா போன் கேமிரா லீக்…
சீனாவில் மிகவும் பிரபலமான செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி, தனது 14 அல்ட்ரா மாடல் போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த நிலையில் அந்த போனின் கண்ணாடி குறித்த தகவல் தற்போது ஆன்லைனில் கசிந்திருக்கிறது.
கடந்தாண்டு அக்டோபரிலேயே ஷாவ்மி 14 மற்றும் ஷாவ்மி 14 புரோ ஆகிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் ஷாவ்மி அல்ட்ரா ரக போனில் ஹைப்பர் ஓஸ் என்ற இன்டர்ஃபேஸ் அம்சம் இடம்பெற இருக்கிறது. ஷாவ்மி 13 அல்ட்ராவில் இருந்ததை விட சற்றே பெரிய லென்ஸ் துளைகள் இருக்கும் என்று தெரியவந்திருக்கிறது. பிரைட்னஸ் லென்ஸ் வசதியும், 1.6 அபார்செர் அளவில் முதன்மை கேமிராவும் இருக்கும் என்று தகவல் கசிந்திருக்கிறது. இதற்கு முன்பு 1.9 என்ற அப்பார்செர் அளவில் கேமிரா பொருத்தப்பட்டிருந்தது. இதேபோல் மேம்படுத்தப்பட்ட 2.5 அபார்செர் அளவில் டெலி போட்டோ கேமிரா இருக்கும் என்று கூறப்படுகிறது. இது கடந்த மாடலான 13 அல்ட்ராவில் 3.0 என்ற அபார்ச்சரில் இருந்தது. சோனி லைட் 900 வகை சென்சார் அல்ட்ராவில் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 120 மில்லிமீட்டர் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமிரா லென்ஸ் இருப்பதால் ஷாவ்மி 14 அல்ட்ரா ரக போன்களில் போட்டோக்கள் கச்சிதமாக எடுக்க முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவை தவிர்த்து ஸ்னாப்டிராகன் 8 ஜென்3 சிப்செட் இருக்கும் என்றும் 6.7 அங்குல ஆமோலெட் டிஸ்பிளே இருக்கும் என்றும், 2கே ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெப்ரஷ் ரேட் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் 5180 எம்ஏ எச் ப்டடரியும், 90 வாட்ஸ் சார்ஜிங் வசதியும் , 50 வாட்ஸ் ஒயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இருக்கும் என்று தகவல் கசிந்திருக்கிறது. எனினும் எந்தவித அதிகாரபூர்வ தரவுகளையும் ஷாவ்மி இதுவரை வெளியிடவில்லை. வரும் பிப்ரவரி 26 முதல் 29 ஆம் தேதி வரை நடக்க உள்ள உலக மொபைல் காங்கிரஸில் ஷாவ்மி 14 ரக போன்கள் இடம்பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வகை போன்கள் உலகளவில் கவனம் ஈர்த்திருக்கின்றன.