ஆமாம்பு!!!! சம்பளம் ஒரு கோடி குடுக்குறாங்க!!!

இந்தியாவில் சுதந்திரமான இயக்குநர்களில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகம் சம்பாதிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது சுற்றுச்சூழல்,சமூகம் மற்றும் நிர்வாகத் திறமை,ரிஸ்க் அசெஸ்ட்மெண்ட் ஆகிய துறைகளில் அட்டகாசமான ஐடியாக்களை வைத்துள்ளவர்கள் இந்த துறைக்கு தற்போது தேவைப்படும் முக்கிய நபர்களாக உள்ளனர்
2019ம் ஆண்டு நிறுவனங்களில் சுதந்திரமான இயக்குநர்களாக இருந்தோரின் எண்ணிக்கை 105 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2022 நிதியாண்டில் 135 ஆக உயர்ந்துள்ளது உலகளவில் நிறுவனங்களை விரிவுபடுத்த நினைக்கும் பெரிய நிறுவனங்கள், இத்தகைய ஸ்மார்ட்டான இயக்குநர்களை வலைவீசி தேடி வருகின்றனர் ஓ.பி. பாட் என்பவர் இந்துஸ்தான் யுனிலிவர்,டிசிஎஸ்,டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல்ஸ் ஆகிய நிறுவனங்களின் சுதந்திரமான இயக்குநராக உள்ளார்
அதேபோல ஷிகா சர்மா என்பவர் அம்புஜா சிமெண்ட்ஸ், டாக்டர் ரெட்டீஸ் மற்றும் டெக் மகேந்திரா ஆகிய நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை அளித்து வருகிறார். வழக்கமான ரப்பர்ஸ்டாம்ப் போர்ட் டைரக்டர்களை வைத்துக்கொள்ள பெரிய நிறுவனங்கள் தற்போது விரும்புவதில்லை என்று கூறப்படுகிறது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிய பங்காற்றும் இயக்குநர்களுக்கு எத்தனை பெரிய தொகையையும் தர நிறுவனங்கள் முன்வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சுதந்திரமான இயக்குநராக ஒரு நிறுவனத்தில் உள்ள இயக்குநருக்கு கூடுதலாக பொறுப்புகள் கூடக்கொண்டே செல்வதால் அவர்களுக்கு பெரிய தொகையை சம்பளமாக அளிக்க நிறுவனங்கள் முன்வருகின்றன வெளிநாடுகளை ஒப்பிடுகையில் சுதந்திரமாக செயல்படும் இயக்குநர்களுக்கு இந்தியாவில் அதிக சம்பளம் அளிக்கப்படுகிறது என்கிறது புள்ளி விவரம். பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் சட்டத்தின்படி ஒரு நபர் அதிகபட்சமாக 7 நிறுவனங்கள் வரை பணியாற்றலாம் என்பதால் சுதந்திரமான டைரக்டர்களின் தேவை கணிசமாக உயர்ந்துள்ளது.