கார் நிறுவனங்களின் புலம்பல் என்ன தெரியுமா?

டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, கார் தயாரிப்பு நிறுவனங்கள் பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. காரில் பயணிப்போருக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் கார்களை பொதுமக்கள் விரும்பி வாங்கும் நிலையில், அதில் கூடுதல் அம்சங்களை சேர்க்க தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் வெறும் ஒரே ஒரு ஏர்பேக் மட்டுமே இருந்தால் போதுமானதாக வாடிக்கையாளர்கள் கருதிய நிலையில் தற்போது நிலைமை மாறியுள்ளதாக கார் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சிறிய கார்கள் உற்பத்தி செய்யும் பட்சத்தில் அதில் 6 ஏர்பேக்கள் வைப்பது வாடிக்கையாளர்களை காப்பாற்றுகிறதோ இல்லையோ, ஆனால் சிறிய கார் உற்பத்தியாளர்களின் சந்தையை கொன்றுவிடும் என கார் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2016ம் நிதியாண்டில் நபர் ஒருவர் முதல் முதலாக ஒரு சாதாரண கார் வாங்குவதற்கான தொகை 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக இருந்ததாகவும் 2022-ல் இது நான்கரை லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் புள்ளி விவிரம் தெரிவிக்கிறது.விரைவில் இது 6 லட்சம் ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அறிமுக அளவிலான கார்கள் 2016ம் ஆண்டில் வாங்குவோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 50 ஆயரமாக இருந்ததாகவும், தற்போது இது வெறும் 1 லட்சத்து 40 ஆயிரமாக குறைந்துவிட்டதாகவும் கார் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். வெறும் சீட் பெல்ட் மட்டுமே பாதுகாப்பு இல்லை என்று கூறும் நிபுணர்கள் , சாலை பாதுகாப்பு குறித்து தெளிவான புரிதல், கல்வி அறிவு, அவசர கால நடவடிக்கைகள் குறித்தும் கார் ஓட்டுவோர் தெரிந்திருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடுகின்றனர்.பாதுகாப்பு அம்சங்களான சீட் பெல்ட்டுடன், அதிநவீன வாகன டிரைவர் அசிஸ்டன்ட்ஸ் சிஸ்டம் என்ற வசதியும்,NCAP விதிகளுக்கு உட்பட்டு தயாராகும் கார்களை வாங்குவதால் விபத்துகள் நேர்ந்தாலும் உயிரிழக்கும் அபாயம் குறையும் என்கின்றனர் நிபுணர்கள், முறையான சாலை பாதுகாப்பு மற்றும் சரியான வாகன இயக்கம் உயிரிழப்புகளை தடுக்கும் என்றும் கார் உற்பத்தியாளர்கள் கருத்தை முன் வைக்கின்றனர். பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்க அதிகரிக்க உற்பத்தி செலவும் அதிகரிக்கிறது என்று கார் உற்பத்தியாளர்கள் புலம்புவதும் மறுப்பதற்கில்லை..